Sunday, November 30, 2008

இன்று

தேச பாதுகாப்புக்காக கொண்டு வந்த பொடா சட்டத்தை சொந்த விருப்பு வெறுப்புக்காக பயன்படுத்திய ஜெயலலிதா ஒருபுறம் தேசிய பாதுகாப்பு சட்டத்தை நேற்று கேலி கூத்தாக்கிய கருணாநிதி ஒருபுறம் ஒரு மத்திய அமைச்சர் மகளை விடுவிக்க பத்து தீவிரவாதிகளை விடுவித்த காங்கிரஸ் கட்சியினரின் தேச பற்று ஒருபுறம் இந்திய கடல் எல்லையை பாதுகாக்காமல் சோமாலிய கடல் கொள்ளையரை பிடிக்க கடற்படையை அனுப்பும் மத்திய அரசு ஒருபுறம் ஐந்து கோடி லஞ்சம் தந்து திகார் சிறையில் இருந்து பீகார் சிறைக்கு மாறி உல்லாசம் அனுபவிக்கும் பப்பு யாதவை தேர்ந்தெடுக்கும் நமது கேடுகெட்ட அரசியல் சாசனம் மறுபுறம் ஒவ்வொரு நாளும் நமது நாட்டை உயர்வாக பேசி பேசி இன்று பிற நாட்டவரின் துக்க விசாரிப்பிற்கும் ஏளன பார்வைக்கும் ஆளாகி நிற்கும் நம் நிலையை கண்டால் நின்று விடவா என இதயம் கேட்கிறது. கண்களில் நீர் துளிர்கிறது. என் இதயம் நிறைந்த இந்தியா இன்று எங்கே செல்கிறது?

Saturday, October 4, 2008

தமிழா ! தமிழா !


தமிழா ! தமிழா !
ஒரு இனத்தை அழிப்பதற்கு ஒன்று படை எடுத்து சென்று அழிக்கவேண்டும் அது முடியாவிட்டால் கூட இருந்தே குழி பறிக்கவேண்டும் இதில் ஆரிய இந்தியா தமிழர்களை அழிக்க தேர்ந்தேடுத்து இருப்பது இரண்டாவது வழிமுறையாகும் இதை சற்று விரிவாக பார்ப்போம்.ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அவர்களது பூர்வ நிலம் மற்றும் பொருளாதார வளம் உயிர் நாடியான நீர் அதை ஒட்டிய விவசாயம், பண்பாடுகாளன வீரம்,கலாசாரம் ஆகியவற்றை பூண்டோடு அழிப்பதாகும். இதில் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.அன்று காவிரிதாயை தடுத்து சிறு சிறு மணல் குன்றுகளை ஏற்படுத்தி தடுத்த கன்னட மன்னர்களை சோழ மன்னர்கள் புறமுதுகு இட்டு ஓடசொய்து மணல் குன்றுகளை அகற்றி மீண்டும் காவிரிதாயை தமிழ் நாட்டிற்கு வரசெய்தான் அன்று மணல் குன்று இன்று அணை.இப்போது செய்யமுடியவில்லை ஏன்?இன்று விவசாயம் பொய்த்து போய் கட்டட வேலை செய்யவும் கக்குஸ் கழுவவும் வெளி நாட்டுக்கும் வெளி மா நிலங்களுக்கும் செல்கிறார்கள் ஆனால் நமது சொந்த மானிலத்தை பார்த்தால் மார்வாடிகளும் ,குசராத்திகளும் ஏனைய இனத்தவரும் சொகுசாக வாழ்கிறார்கள்.அதிலும் இந்த மலையாளிகளின் கொட்டம் சத்தமின்றி உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. டீக்கடையில் ஆரம்பித்து இவர்களின் ஆக்கிரமிப்பு எல்லை மீறி விட்டது. ஊர் நாட்டிலிருந்து இங்கே வந்து ஒருத்தன் தொழில் செய்தால் பரவாயில்லை, மாமன், மச்சான், அண்ணன் தம்பி, சித்தப்பா, பெரியப்பா என எல்லோரையும் இங்கே இறக்குமதி செய்து விடுகின்றனர் இவர்கள் சிறந்த உழைப்பாளிகள் எனில் ஏன் ஊரை விட்டு நாடோடிகளாய் அலைகின்றனர். கேரளாவில் ஏன் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை? காரணம் இவர்களின் குள்ள நரித்தனமும் கம்யூனிசப் போக்கும் தான். அங்கே பருப்பு வேகாமல், இங்கே வந்து டேரா போட்டுக் கொண்டிருக்கின்றனர்.சரி இந்த ஆரியர்கள் நம்முடைய வீரத்தையாவது மதித்தார்களா,இரண்டாம் உலக போரின் போது இங்கு வெள்ளையன் கேட்டான் உங்களுடைய வீரப்பரம்பரையினரின் ஆட்களை தாருங்கள் என்று அப்போதும் இந்த ஆரியர்கள் தமிழர்களை தள்ளிவிட்டு எனைய சிங்கு,வங்காளி,மாரத்தி போன்ற இனங்களையே சேர்த்தார்கள், ஆனால் வெள்ளயனுக்கும் தெரியும் வரலாற்றுக்கும் தெரியும் யார் முதலில் வீரத்துடன் போராடினார்கள் என்று .சரி ஒருசாரரான மீனவர்களையாவது நிம்மதியாக விட்டார்களா?இதுவரை சற்றொப்ப 350 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்? இந்தியாவின் கடலோரக் காவல்படை சுழன்று சுழன்று சுற்றி வந்தபோதும் தமிழக மீனவர்களைச் சிங்களர் சுட்டுக் கொல்வதும் கடத்திச் செல்வதும் தடுக்கப்படவில்லையே ஏன்? தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போய் மீன்பிடித்தால் அவர்களைத் தளைப்படுத்தலாம். அதைவிடுத்து அவர்களை சுட்டுக் கொல்வது என்ன ஞாயம்? தமிழகத்திற்குரிய கச்சத்தீவை இந்திராகாந்தி சிங்கள அரசுக்குக் கொடுத்ததால்தானே, எல்லை தாண்டித் தமிழக மீனவர்கள் வந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டே வருகிறது. சாகின்றவர்கள் தமிழர்கள்; எனவே, சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது.சரி இதை எல்லாம் பார்த்து இங்குள்ள கட்சிகள் என்ன செய்கிறது? தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் ‘முத்தமிழ் விற்றவர்’ முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச் செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம். வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி ‘மிகவும் கவலையுற்று’ ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துல்லியமாகக் கண்டிறிந்து ‘அறிக்கை’ மட்டுமே விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம். "நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த இந்திய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம். இவர்கள் மட்டுமா? தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல் நகைச்சுவையாளர் வைகோ, "அடங்க மறு" என்று அறிமுகமாகி ‘சீட் கொடுத்தால் அடங்கிப் போ’ என்று புதியத் தத்துவம் படைத்த திருமா, அகில இந்திய சமத்துவக் கட்சி என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டாமை சரத்குமார், 2011-ல் தமிழக முதல்வராகப்போகும் லட்சிய தி.மு.க. டி.ஆர். இராசேந்தர், திடீர் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள். இந்திய அடிவருடியாகவும்,அந்த இந்தியாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும்.நாம் முன்னிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தைத் தானே தவிர பெருமுதலாளிகள் தலைமையிலான இந்தியத் தேசியத்தை அல்ல!- தமிழ்

பொருளாதாரத் தீர்வு !!!பொருளாதாரத் தீர்வு !!!
பணவீக்கம் 11 விழுக்காட்டையும் தாண்டி எகிறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இயற்கையின் மர்மப் புதிர்களை அவிழ்த்து சுனாமி எனும் பேரழிவுக்குக் கூட அறிவியல் விளக்கமளித்து விட்டது. ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மனிதப் பேரழிவுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. யானையைத் தடவிய குருடர்களைப் போல பணவீக்கத்துக்கு வல்லுநர்கள் கூறும் விளக்கங்கள், பணவீக்கத்தைக் காட்டிலும் பெரிதாக வீங்கிக் கொண்டே செல்கின்றன.எந்தக் கோணத்தில் செய்யப்படும் வியாக்கியானமாக இருந்தாலும், அவையனைத்தும் உலக நிதிமூலதனக் கும்பலை, பன்னாட்டு நிறுவனங்களை, அமெரிக்க வல்லரசை, ஒரு வார்த்தையில் கூறினால் உலக முதலாளித்துவத்தையே குற்றவாளி என்று அடையாளம் காட்டுகின்றன. உலகமயமாக்கத்தின் விளைவாக உலகெங்கிலும் ஒரே நேரத்தில் எழும்பியிருக்கும் இந்த செயற்கை சுனாமி, இயற்கை சுனாமியைப் போலன்றி, ஏழைகளின் மீது மட்டுமே பேரழிவை ஏவி வருகின்றது."உழைப்புச் சக்தி உள்ளிட்ட எல்லாப் பண்டங்களின் பணமதிப்பும் (விலையும்) உயருதல்'இதுதான் பணவீக்கம் என்ற சொல்லுக்கு முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் அளிக்கும் விளக்கம். ஆனால் நாம் காணும் உண்மை நிலைமை என்ன? அரிசி முதல் பெட்ரோல் வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் ஊதியம் உயரவில்லை. எனவே இந்த விலைவாசி உயர்வைச் சமாளிப்பதற்காக உணவு உள்ளிட்ட தமது நுகர்வுகளை மக்கள் குறைத்துக் கொள்கிறார்கள்; அல்லது வருமானத்தைக் கூட்டுவதற்காக உழைப்பு நேரத்தை அதிகரித்திருக்கிறார்கள். "உழைப்பை அதிகரிப்பது அல்லது நுகர்வைக் குறைப்பது' இரண்டின் பொருளும் ஒன்றுதான். பணவீக்கத்தின் காரணமாக வீழ்ச்சி அடைந்திருப்பது பணத்தின் மதிப்பு அல்ல; உழைப்புச் சக்தியின் மதிப்பு. இது உலகம் முழுதும் உள்ள உழைக்கும் மக்களின் மீதும் உலக முதலாளித்துவம் ஏவியிருக்கும் மறைமுக ஊதிய வெட்டு!இந்தப் "பண வீக்கத்தின்' மூலம் பிழிந்தெடுக்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்புதான், கொள்ளை இலாபமாகக் குவிந்து கொண்டிருக்கின்றது. விலை உயர்வைச் சமாளிக்க நீங்கள் குறைத்துக் கொண்ட ஒரு வேளைச் சோறு, நிறுத்தப்பட்ட உங்களது மகனின் படிப்பு, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பணம் .. இவைதான் தங்கக் காசுகளாக மாறி அம்பானி, டாடாக்களின் பணப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. எனவேதான் நிதி மூலதனக் கொள்ளையர்கள், பன்னாட்டு முதலாளிகளின் இலாபம் வீங்கிக்கொண்டே போகிறது.பணவீக்கம்விலைவாசி உயர்வு ஆகியவை குறித்த பொருளாதாரச் சொற்சிலம்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இப்படியொரு எளிமையான கேள்வியை எழுப்பிப் பாருங்கள். கச்சாப் பொருட்களின் விலையும் உற்பத்திச் செலவும் அதிகரிக்காத போது, இரும்பின் விலையும் சிமெண்டின் விலையும் பிற பொருட்களின் விலையும் ஏன் உயர வேண்டும்? அவற்றின் விலைக்கு அரசாங்கம் ஏன் ஒரு உச்சவரம்பை நிர்ணயிக்கக் கூடாது? ""முடியாது. சந்தையின் சுதந்திரத்தில் அவ்வாறு தலையிட முடியாது'' என்று இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறார் சிதம்பரம். ஒரு குடிமகனின் உயிர் வாழும் உரிமையைக் காட்டிலும், ஒரு மனிதனின் உணவுக்கான உரிமையைக் காட்டிலும், கொள்ளை இலாபம் ஈட்டுவதற்கான முதலாளிகளின் உரிமைதான் மேன்மையானதாம்! ""எனினும் இது ஒரு பொருளாதாரக் கொள்கை மட்டுமே. இதனை அரசியலாக்காதீர்கள்'' என்கிறார் அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங். இதனைப் பொருளாதாரக் கொள்கையாக மட்டுமே நாம் ஒப்புக் கொள்வோமானால் அந்தக் கொள்கை வழங்கும் தீர்வான பட்டினிச்சாவையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.மக்கள் தங்களை வருத்திக் கொள்வதன் மூலம், இந்தப் பாரதூரமான நிலைமையை எத்தனை நாளைக்குச் சமாளிக்க முடியும் என்பதுதான் கேள்வி. ஏனென்றால் ""மலிவாக உணவுப் பொருட்கள் கிடைத்து வந்த காலம் மலையேறி விட்டதாக''ப் பொருளாதார வல்லுநர்கள் பயமுறுத்துகிறார்கள். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அடுத்த ஓரிரு மாதங்களில் இருநூறு அமெரிக்க டாலரைத் தொட்டுவிடும் என அச்சமூட்டும் விதத்தில் செய்திகள் வெளிவருகின்றன.உழைக்கும் மக்கள் விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாமல் திணறுவதை விடப் பரிதாபகரமானது, விலைவாசி உயர்வைச் சகித்துக் கொண்டு வாழும் மனோபாவம்தான். ஏனென்றால், இந்தச் சகிப்புத் தன்மை, அவர்களைச் சுய அழிவை நோக்கி அல்லவா தள்ளிச் செல்கிறது.கடந்த ஓரிரு ஆண்டுகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை, ஏறத்தாழ 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனால் தீராத நோய்க்கு ஆட்பட்டுள்ள பல நோயாளிகள் மருந்து உட்கொள்வதையே நிறுத்தி விட்டதாகக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் வீ.எஸ். நடராசன். விலைவாசி உயர்வைச் சமாளிக்க இன்று தங்களின் உணவுத் தேவைகளைச் சுருக்கிக் கொள்ளும் மக்கள், நாளை பட்டினி கிடந்து நிலைமையைச் சமாளிப்பார்களா?உழைக்கும் மக்களிடம் காணப்படும் இந்தச் சகிப்புத் தன்மைதான், பெட்ரோல் விலை உயர்வு என்ற இடியை மக்களின் தலையில் இறக்கும் தைரியத்தை ஆளும் வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பெட்ரோல் விலையை முன்னரே உயர்த்தியிருக்க வேண்டும்'', ""விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று பகிரங்கமாக அறிக்கை விடும் தைரியத்தை ப.சிதம்பரத்திற்கு வழங்கியிருக்கிறது. இந்தச் சகிப்புத் தன்மைதான், ""பொருளாதார வளர்ச்சி இருந்தால் விலைவாசி உயரத்தான் செய்யும்'' என அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங் திமிராகப் பேசுவதற்கு இடம் கொடுத்திருக்கிறது.இந்தப் பொருளாதார வளர்ச்சி உழைக்கும் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது. அதேசமயம், கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கும் அம்பானிக்கு, 200506இல் கிடைத்த 5,195 கோடி ரூபாய் இலாபத்தை 200607இல் ரூ. 10,372 கோடியாக வாரி வழங்கியிருக்கிறது. விலைவாசி உயர்வினால் நடுத்தர வர்க்கம் கூட வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடும் பொழுது, முகேஷ் அம்பானியோ 4,000 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர அரண்மனையைக் கட்டி வருகிறார்.இப்படிப்பட்ட மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு கொண்ட பொருளாதார வளர்ச்சி அருவெறுக்கத்தக்கது. இதனை எதிர்த்துப் போராடினால், இருக்கின்ற வாழ்க்கையும் அழிந்து போய் விடுமோ என்ற அச்சம் உழைக்கும் மக்களை ஆட்டிப் படைக்கலாம். ஆனால், போராடாமல் சகித்துக் கொண்டு வாழ்ந்தால், இன்று இருப்பதைவிட மோசமான வாழ்க்கையை அல்லவா நாளை நாம் வாழ வேண்டியிருக்கும்?உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற தீர்வை, பட்டினிச் சாவையும் வறுமையையும் ஒழிக்கின்ற வகையிலான பொருளாதாரத் தீர்வை நாம் தேடுவோமாயின், "நாம் உயிர் வாழ வேண்டுமானால், உலக முதலாளித்துவம் உயிர்வாழக் கூடாது' என்ற தீர்வே நமக்கு விடையாகக் கிடைக்கிறது. இதனைப் "பொருளாதாரத் தீர்வு' என்று ஆளும் வர்க்கம் ஒப்புக் கொள்வதில்லை. இதைத்தான் "அரசியல்' என்கிறார் அரசியல் கைபுள்ள மன்மோகன் சிங்

இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?


இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். "வரும் பொதுத் தேர்தலில், ஜெயிலில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் முதல் அனைத்துக் கைதிகளும் ஓட்டுப் போடுவார்கள். அதற்காக அவர்கள் கோர்ட்டில் மனு போடுவார்கள். கோர்ட்டும் அவர்களுக்கு அனுமதி கொடுக்கும்... பாருங்கள்!' என நண்பர் என்னிடம் கூறவும் அதிர்ந்து போன நான், "அப்படியெல்லாம் ஒன்றும் நடக்க சாத்தியமே இல்லைங்க!' என்று பதில் கூற, நண்பர் தொடர்ந்தார்."என்ன நண்பரே... உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான, பண்பாடுகளும் கலாசாரமும், இறையாண்மையும் நிறைந்த ஒரு இந்தியநாட்டின் அரசாங்கத்தைக் காப்பாற்ற படுபயங்கர கொலைகள் செய்து, அவை நிரூபிக்கப்பட்டு,நமது கோர்ட்டால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை, நம்பிக்கை ஓட்டுப் போடுவதற்கு மத்திய அரசே ஏற்பாடு செய்கிறது.சுப்ரீம் கோர்ட்டும் அவர்களை அனுமதிக்கிறபோது, வரும் தேர்தலில் ஓட்டுப் போட நாட்டிலுள்ள மற்ற கைதிகளையும் அனுமதிக்கலாம் அல்லவா?மேலும், பப்பு யாதவ் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஓட்டுப்போட அனுமதி கேட்ட போது, "இது தப்பு யாதவ்' என நமது சுப்ரீம் கோர்ட்டே சொல்லவில்லையே...!' என நண்பர் மனவேதனையுடன் கூறியபோது என்னால் பதில் கூற முடியவில்லை.ஒருபக்கம், ஆங்காங்கே குண்டுகளை வைத்து அப்பாவி மக்களின் உயிரைக் கொல்கின்றனர் பயங்கரவாதிகள்.இன்னொரு பக்கம் கொலைக் குற்றவாளிகள் ஓட்டுப்போட்டு, ஜெயித்துநாட்டை ஆள்பவர்களாகி, மக்களின் மனதைக் கொல்கின்றனர்.எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இந்தியாவில் பிறக்க வேண்டும், அதிலும் இந்தியனாய் வாழவேண்டும் என நமது தேசத்தின் மீது நேசம் கொண்ட ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். ஆனால்...நடப்பவற்றை நினைத்துப் பார்த்தால், நின்றுவிடவா? என இதயம் கேட்கிறது. கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது. எம் இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?யார் இதற்கு பதில் சொல்வார்கள்? ஒன்றும் சொல்லத் தெரியவில்லை எமக்கு!

Biofuel குறித்த கட்டுரை


Biofuel குறித்த கட்டுரை

''இங்கிருந்து பார்த்தால் நம் பூமி நீலமும் பசுமையும் கலந்த ஒரு அழகிய பந்து போல காட்சியளிக்கிறது... காம்ரேட்''-இது 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி முதன் முதலில் விண்ணுக்குச் சென்ற சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் ரேடியோ மூலம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினரிடம் மனம் எல்லாம் மகிழ்ச்சி பூரிக்க உணர்ச்சிவசப்பட்டு சொன்னது...அதே ககாரி்ன் இன்று உயிரோடு இருந்து, மீண்டும் விண்வெளிக்குச் சென்றிருந்தால் பூமி இப்போது இருக்கும் கோலத்தைப் பார்த்து அங்கேயே அலறித்துடித்து, மயங்கியிருப்பார்.ககாரின் பார்த்த பூமி இப்போது இல்லை.. அவர் பார்த்த பசுமையும் இல்லை.. மரங்களை வெட்டியும், கனிமங்களை, பெட்ரோலியத்தை தோண்டியும் புண்ணாகிவிட்டோம் பூமியை.'பூமியின் நுரையீரல்' என அழைக்கப்படும் அமேசான் மழைக் காடுகளின் (Rain forest) விஸ்தாரம் கடந்த 50 ஆண்டுகளில் 20 சதவீதம் அளவுக்கு சுருங்கிப் போய்விட்டது. சர்வதேச சட்டங்கள் போட்டாலும் இன்னும் அங்கே 'காடுவெட்டல்' தொடர்ந்து கொண்டிருக்கிறது.அதே போல பனிப் போர்வை போர்த்திய சைபீரியாவில் எண்ணெய் தோண்ட ஆரம்பித்து அந்தப் பகுதியையே பெட்ரோலிய கசடாய் மாற்றிவிட்டது ரஷ்யா.தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கத்தால் வெளியேறும் 'கிரீன் ஹவுஸ் கேஸ்' (Greenhouse gases) பூமியின் வெப்பத்தை தொடர்ந்து உயரச் செய்து கொண்டிருக்கின்றன.கிரீன் ஹவுஸ் கேஸ்களில் மிக முக்கியமானவை நீராவி, கார்பன் டை ஆக்ஸைட், குளோரோபுளூரோகார்பன் (Chlorofluorocarbon-CFC) எனப்படும் மீத்தேன், ஈத்தேன் ஆகியற்றின் மறு உருவங்கள் மற்றும் ஓஸோன்.நீராவி நல்லது தானே.. அது எப்படி வெப்ப நிலையை கூட்டும் என்கிறீர்களா. உலகின் வெப்ப நிலையை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது மேகங்களும் அவை தாங்கியிருக்கும் நீராவியும் தான்.அதே போல ஓஸோன் மண்டலம் தானே நம்மை அபாயகரமான சூரிய-விண் கதி்ர்வீச்சுக்களில் இருந்து காக்கிறது. அது எப்படி புவியின் வெப்பத்தைக் கூட்டும்?இது பூமி்க்கு 10 முதல் 50 கி.மீ. உயரத்தில் இருக்கும்போது தான் (இது தான் ஓஸோன் லேயர்) 'ஆபத்பாந்தவன்'. சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலட் (UV) கதிர்வீச்சு கொண்ட போட்டான்களை (Photons) தடுத்து விண்ணுக்கே திருப்பி விடும் மாயஜாலம் தான் ஓஸோன்.ஆனால், இதே ஓஸோன் நம் வளி மண்டலத்தில், அதாவது பூமிக்குள் சுற்றினால் அது அபாயம். மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் (atoms) கொண்டது தான் ஒரு ஓஸோன் மூலக்கூறு. இது பூமிக்குள் உலாவும் போது நம் உடம்புக்கும் நல்லதில்லை, பூமிக்கும் நல்லதில்லை. இது நம் நுரையீரலை பதம் பார்ப்பதோடு புவியின் வெப்ப நிலையை உயர்த்தும் வேலையையும் பார்க்கிறது.கண்ணதாசன் சொன்னது மாதிரி.. 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் தான் எல்லாம் செளக்கியம்'. இடம் மாறி வந்தால் பிரச்சனை தான்.அதே போல மீத்தேன், ஈத்தேன் ஆகியவை தனியே இருக்கும்போது பிரச்சனையில்லை. அவை குளோரின், புளோரினுடன் சேர்க்கப்பட்டு (CFC-களாக மாற்றப்பட்டு) நம் அலுவலக-வீட்டு ஏசி, ரெப்ரிஜிரேட்டர்களில் குளிரிவிப்பானாக பயன்படுத்தப்படும்போது தான் சிக்கல்.இந்த CFC வளி மண்டலத்தைத் தாண்டி மேலே பயணிக்கும்போது ஓஸோனில் ஓட்டை போடுகின்றன.இப்படி போகிறது.. கிரீன்ஹவுஸ் கேஸ்களின் தாக்கம்.சைக்கிள்களுக்குப் பேர் போன சீனாவில் கார்கள் பெருக்கம், வளி மண்டலத்தை சல்பர்-டை ஆக்ஸைட் மண்டலமாக மாற்றிவிட்டது. சீனா மற்றும் தெற்காசிய நாடுகளில் அவ்வப்போது வாகன-தொழிற்சாலை புகைகளால் ஏற்படும் புகை மூட்டம் அந்த நாடுகளையே பல வாரங்கள் ஸ்தம்பிக்க வைத்து வருகிறது.(பெய்ஜிங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட புகை மூட்டம் ஒலிம்பிக் போட்டிகளையே கேள்விக்குறியாக்கிவிட, அங்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நல்ல வேளையாக மழை பெய்து புகையை கலைத்தது.)இப்படி பூமியை நாம் படாதபாடு படுத்த பதிலுக்கு பூமியும் நமக்கு பாடம் புகட்ட ஆரம்பித்து வெகு நாட்களாகிவிட்டது. ஆனால், அதன் தாக்கம் இந்த நூற்றாண்டில் தான் மிகவும் வலுவாக உணரப்படுகிறது.'எல் நினோ' (El NiÑo ), 'லா நினா' (La NiÑa) ஆகிய கடலில் ஏற்படும் வழக்கமான புவியியல் மாற்றங்கள் டிராபிக்ஸ் (Tropical zones) எனப்படும் வெப்ப மண்டலப் பகுதிகளில் கன மழையையும் டெம்பரேட் (Temperate zones) எனப்படும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் கடும் வறட்சியையும் ஏற்படுத்தி விவசாயத்தையையும் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு வருகின்றன.பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக பசிபிக் பெருங்கடலின் மேல் மட்டத்தில் ஏற்படும் வெப்ப நிலை மாற்றம் தான் எல் நினோ, லா நினா. இந்த மாற்றங்கள் பல மில்லியன் ஆண்டுகளாய் ஏற்பட்டு வருவது தான். இதனால் ஏற்படும் கடல் நீரோட்ட மாற்றங்கள், வெப்ப நிலை மாற்றங்களை பூமி மில்லியன் ஆண்டுகளாய் சந்தித்துக் கொண்டே தான் வருகிறது.ஆனால், இதனால் ஏற்படும் பாதிப்பின் அளவு ஆண்டுகாண்டு அதிகரித்துக் கொண்டே வருவது தான் புதிய கவலையை பரவச் செய்துள்ளது.மேலே சொன்ன எல்லா விஷயங்களாலும் உடனடியாக பாதிக்கப்படுவது விவசாயம் தான். முன்பெல்லாம் விவசாயம் பாதிக்கப்பட்டால் குறிப்பிட்ட அந்தப் பகுதியோ, அந்த நாடோ தான் சிக்கலை சந்திக்கும்.ஆனால், உலகமயமாக்கல் எல்லா நாடுகளையும் சிலந்தி வலை மாதிரி பின்னிப் போட்டுவிட்டதால், ஆஸ்திரேலியாவில் மழை பெய்யாவிட்டால் தென் அமெரிக்காவில் கோதுமை விலை ஏறும் நிலை உருவாகிவிட்டது.எப்போதுமில்லாத வகையில் ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் ஏற்பட்ட 7 ஆண்டு தொடர் வறட்சி உலகம் முழுவதுமே கோதுமையின் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. காரணம், உலகின் மிகப் பெரிய கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடு ஆஸ்திரேலியா தான்.அங்கு விளையும் கோதுமையை நம்பி பல நாடுகள் கோதுமை உற்பத்தியை நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டன. கோதுமை விளைந்து வந்த அந்த நிலங்களில் இப்போது பயோ பியூல் (bio-fuel) தயாரிப்புக்கு உதவும் மக்காச்சோளம், சோயா, ஜெட்ரோபா ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.காரணம், கோதுமையை விட இந்த பயோ பியூல் பயிர்களில் கிடைக்கும் பல மடங்கு லாபம்.இப்படி சாப்பாட்டை விட்டுவிட்டு பயோ-பெட்ரோல் தயாரிப்பில் பல நாடுகளில் இறங்கிவிட்டதற்குக் காரணம், கச்சா எண்ணெய்யின் விலை 'குண்டக்க மண்டக்க' உயர்ந்தது தான்.இதனால் 'பயோ பியூல்' தாவரங்கள் உற்பத்தியாகும் பரப்பு விரிந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இதன் காரணமாய் உலகம் முழுவதும் இப்போது ஒரு புதிய போர் மூண்டு வருகிறது...அது வயிறுகளுக்கும் வாகனங்களின் பெட்ரோல் டாங்குகளுக்கும் இடையே மூண்டுள்ள நவீன போர்...!

Thursday, September 11, 2008

அவன் தந்த முத்தம்

அவன் தந்த முத்தம் .........

யாருக்கும் தெரியாதே........

மறு நாளே பருக்களை........

முகத்தில் .....


Wednesday, September 10, 2008

Tuesday, August 12, 2008

அம்மா

வேலை தேடி பஸ் ஏறிய பொழுது
சீக்கிரம் வேலை தேடு
அப்பதான் நம் கடனை அடைக்க முடியும்-அப்பா

சீக்கிரம் வேலை தேடு அப்பதான்
என் கல்யாணம் நடக்கும் -தங்கை

சீக்கிரம் வேலை தேடு -எங்களுக்கும்
எதாவது வேலை இருந்தா சொல்லு -நண்பர்கள்

சீக்கிரம் வேலை தேடு அப்பதான் நம்
கல்யாணம் நடக்கும் -காதலி

பார்த்து போ வேளா வேளைக்கு சாப்பிடு
சனி கிழமை ஆனா என்னை தேய்த்து குளி-அம்மா
இன்று அம்மா சாப்பிடவும் சனிக்கிழமை என்னை தேய்க்கவும்
மறந்து போனது .ஆனால்
அம்மா சொன்ன வார்த்தைகள் மட்டும்
மறக்காமல் இன்னும் நெஞ்சுக்குள் ஈரமாய்
அம்மா என்ன செய்து உன் கடனை அடைப்பேன்.


எப்படி கொடுப்பேன்

என் காதலி ,

நீ கொடுத்த பரிசுகளை கேட்டாய்
கொடுத்து விட்டேன்
நீ கொடுத்த கடிதங்களை கேட்டாய்
கொடுத்து விட்டேன்
உன் நினைவாய் என்னிடம் இருந்த
உன் படங்களை கேட்டாய்
கொடுத்து விட்டேன்
ஆனால்
நீ என்னை கட்டியணைத்த போது
உண்டான வெப்பத்தை எப்படியடி
திருப்பி கொடுப்பேன்
ஒவ்வொரு முறையும் உன் காலடி
ஓசை கேட்டு கனத்து போன
இதயத்தின் உணர்வுகளை எப்படி கொடுப்பேன்


Thursday, July 24, 2008

எங்கே போகிறோம்

பூமியில் பிறந்தோம்
பூக்களாய் மலர்ந்தோம்
பறவைகளாய் பாடித் திரிந்தோம்
இயற்கை உணவு கொடுத்தது
சுதந்திரமாய் வாழ்ந்தோம்

நாகரீகம் பிறந்தது
மனித வாழ்வும் குலைந்தது

பணம் என்ற அரக்கன் பிறந்தான்
மனிதன் நிம்மதி போனது


Tuesday, July 22, 2008

யார் வானத்தில்

யார் அங்கே
வானத்தில் சோப்பு போட்டு
துணி துவைப்பது

நுரைகளாய் மேகங்கள்

சீதை

சிதையிலே நடந்து
கற்பு காட்டினாள் சீதை அன்று

சீதையே சிதையாகிப் போனாள் இன்று .

Friday, July 18, 2008

எங்கே சென்றதடி நம் காதல்

என்னவளே
கல்லூரியில் படிக்கும் போது
நீயே என் வேதம் என்றாய்
நீயே என் வானம் என்றாய்
நீயே என் வாழ்க்கை என்றாய்
எல்லாம் கல்லூரி வரைதான்
இதோ
கையில் ஒரு குழந்தையுடன்
கணவனுடன் செல்கிறாய்
எங்கே சென்றதடி உன் புன்னகை
என்னை ஏன் குற்றவாளி போல் பார்க்கிறாய்

கொஞ்ச kaalam
unnai என் idaya சிறையில்
vaiththirunthen enpahtalaa
paravaayillai
நீ என்னை manalil kolamittai

nano manathil kolamitten.


கடந்த காலம்

என் கல்லூரி தோழியே

நாம் அன்று முதல் முதலில்
சந்தித்த அந்த வேப்ப மரங்கள்
நம் பேசி சிரித்ததை மறைத்திருந்து
பதிவு செய்த காற்று
நம் காலடி பதிந்த அந்த
சாலையோரம்கள்
எல்லாம் இன்னும்
அப்படியே இருக்கும் பொது
எப்படி அது
கடந்த காலமாகும்.உன் பார்வை

ஒரு கோடி சூரியன் என்றாலும்
ஒரு பனித் துளிக்குள் அடக்கமே

கோடி இன்பம் என்றாலும்
உன்
ஒரு விழி பார்வையில் அடக்கமே

சுமைகள்

சுமந்து சுமந்து வலிக்குதென்று
சுமைகளை கீழே போட்டு
சுமந்தவன் உட்கார
சும்ந்தவனே சுமைக்கு
சுமையான விந்தையென்ன .

இதுதானா காதல்

ஏதும் இடம் மாறவில்லை
ஆனால் எல்லாம் மாறித் தெரிகிறதே
இதுதான் காதலா

என் காதல்

என் காதலியே
நீர் நெருப்புக்குள் செல்லலாம்
ஆனால் நெருப்பு நீருக்குள் செல்ல முடியுமா
அது போல்தனடி என் காதலும்
நீ என்னை மறக்கலாம்
ஆனால் நான்
உன்னை மறக்க முடியுமா

காதல்

மண்ணுக்குள் விழுந்த உடன்
முளைக்குமா விதை
கண்ணுக்குள் உன் பிம்பம் விழுந்த உடன்
காதல் மட்டும் முளைத்தது எப்படி?

பூமி அதிர்ந்தால் பூகம்பம் என்பர்
உன் காலடி ஓசை கேட்டு
என் இதயம் அதிர்ந்தால் என்ன பெயர் ?
தமிழ் வாழ்க

என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம.