Sunday, October 23, 2011

என் கண்மணி

கண்மணி

நம் காதல் கல்லறையில் முடியலாம்
ஆனால் அதில் முளைக்கும்
ஒற்றை ரோஜா நம் காதலை
உலகுக்கு சொல்லும் ..

கண்மணி

என் கனவுகள் விற்பனைக்கு அல்ல
ஏனெனில் அதில் - உன்
நினைவுகளும் கலந்திருப்பதால் ..

கண்மணி
காதல் கருவை சுமந்து சுமந்து
நானும் தாய் அனேனடி..

விடிகாலை   பொழுதுகளிலும்
வெளிச்சமில்லா இரவுகளிலும்
உன் நினைவுகளால் சிரித்திருக்கிறேன்
அழுதிருக்கிறேன்.உறக்கம் வராமல் 
புரண்டு புரண்டு படுத்திருக்கிறேன் 
கண்மணி எனக்கும் கொஞ்சம் 
வைத்தியம் பாரடி ..


ஒவ்வொரு குளிர்கால இரவும் 
நாம் சேர்ந்திருந்த காலத்தை
நினைவு படுத்தி தேகம் தகிக்குதடி

ஒவ்வொரு வெயில் கால இரவும் 
நாம் பிரிந்திருந்த காலம் 
நினைவில் வந்து வேதனையை 
தூண்டுதடி .என்ன செய்வேன் நான் .

ஒவ்வொரு முறையும் உன்னை 
மறக்க நினைத்து நினைத்து 
முடியாமலே தவிக்கிறேனடி 

விளக்கென்று தெரியாமல் 
உன்னை சுற்றி சுற்றி வந்த 
விட்டில் பூச்சி ஆனேன் . 

முகம் பாராமலே உன் 
முகவரி கொடுத்தாய்
என் முகவரி நீயென்று ஆன போது
ஏனடி சொல்லாமல் ஓடி விட்டாய்

எத்தனையோ இரவுகள் உன்னை நினைத்து
என் இதயம்
அழுதிருக்கிறது -- கண்மணி
ஒரு பகலேனும் எனக்காக நீ
சிரித்திருந்தால் என்ன..

தினமும் என்னோடு உன் கனவுகளில்
குடும்பம் நடத்தினாயே
ஒரு முறையேனும் நிஜத்தை
சொல்லியிருந்தால் என்ன ?
என்றும் உன் நிழலாய்
இருந்திருப்பேனே ......