Tuesday, September 23, 2014

எனது அன்பு மனைவியே

எனது அன்பு மனைவியே ,

எனது வாழ்க்கை பயணத்தின்
வழித்துணையாய்  வந்தவளே

என் கனவு தேசத்தின் காதல் ராணியே

ஆடி மாத காவிரியில் வரும்
புது வெள்ளம்  போல வந்தவளே

 எனது  இரவும் பகலும் நீதானே எனக்கு
எனது இடியும் மின்னலும் நீதானே
எனது புயலும் மழையும் நீதானே

சில நேரங்களில் சூரியனை போல் சுட்டெரிக்கிறாய்
ஆனாலும் சூரியன் இல்லாமல் இரவேது பகலேது
எனது வாழ்கை தான் ஏது

நமது தருணங்கள்  சில நேரங்களில்
அமைதியானது
சில நேரங்களில் ஆரவாரமானது
ஆனா போதிலும் அது உயிர்ப்புள்ளது

உன்னுடைய காதல் முரட்டு தனமானது
ஆனாலும் முடிவற்றது

ஒவ்வொரு முறையும் கரைக்கு
வந்து கவிதை  எழுதும் கடல் அலை போல
நம்முடைய ஒவ்வொரு தருணங்களும்
காலம் எழுதும் கவிதைகளே

எனக்கு இமயம் வெல்லும் ஆசை இல்லை
உன் இதயம் வெல்லவே ஆசை

கவிதை எழுதி கொண்டிருந்தேன்
உன் அன்பு எனும் மை கொண்டு
காவியங்களை எழுதுவேன்











Friday, April 26, 2013


உன் விரலை மீட்டினேன்  நீ வீணையாகி  போனாயே
நீ விடும் மூச்சு காற்றின் சத்தம் கூட சங்கீதமே


என் கனவுகள் எல்லாம் சேர்த்து வாய்த்த வண்ண கலவையே
எந்தன்  உயிரின் விலாசம்  உந்தன் ஜீவனே


இந்த வேடனை சிறை  வைத்த கன்னி பறவையே
உன் விழி அம்பில் என்னை கொல்லாதே சின்ன பறவையே

உன் காது மடல் ஓரத்திலே முத்தம் இடும் பொது
என் இதயத்தில் அறைகளிலே யுத்தம் நடக்குதே

காதல் தேர்தலில் என் இதயத்துக்கு  ஒட்டளித்தாய் கன்னி  மையிலே
உன்னை காலமெல்லாம் காத்திருப்பேன் என் கண் இமையிலே

Thursday, October 25, 2012

மழையும் என் தோழர்களும் தோழிகளும்

தனிமை வெயிலில் வறண்டு போன 
பாலை வனமாய் வாழ்கை 

ஒவ்வொரு மழைத்துளி வரவைப் பார்த்து 
வானம் பார்த்து   காத்திருக்கும் பூமியாய் மனசு 

ஒவ்வொரு முறை  குளிர் காற்று 
கடக்கும் போதும் மழையை  எதிர்நோக்கும் 
ஈரம் பட்ட மனது 

சில நேரங்களில் சிறு மழை பெய்தாலும் 
பற்றுதல் இல்லாமலோ இல்லை பற்றி 
கொள்ள முடியலோ  கடந்து சென்றது 
மழை நீர் ...

வெப்பத்தில் ஆவியாகி காணாமல் போகாமல் 
அவ்வப்போது சிறு   அன்பு  மழையில் 
நனைத்து குளிர்விக்கும்  தோழிகள் 


மேகம் மழை மூலம் பூமியை குளிர்வித்தாலும் 
பூமியோடு எப்போதும் சொந்தம் கொண்டாட 
முடிந்ததில்லை .

அன்பு கொண்ட நெஞ்சங்களும் அப்படியே ..

மேகம் மேலே இருக்கும் வரைதான் 
பூமிக்கு மழை கொடுக்க முடியும் ..

மழை நீர்  பெற்ற  பூமி  மலர்களை 
வான் நோக்கி வளர்த்து நன்றி சொல்கிறது 

மரங்களின் மூலம்  தன் கை அசைத்து 
அன்பை சொல்கிறதே 

அது போலவே நானும் ...

எப்போதும் என்  தோழர்களுக்கும் தோழிகளுக்கும் ..
நன்றியுடையவனாய் .................








 

Saturday, July 14, 2012

இன்னொரு காதல் கவிதை

உன் விழி ஈர பார்வையில்
நனைந்து போனது என் இதயம் ...

மழைக்கால மேகங்களாய்  எப்பொழுதும்
என்னுள் அலையும் உன் நினைவுகள் ...

நீ என்னை கடந்து போன
ஒவ்வொரு நொடியும்
நன் என்னை மறந்து போன 
தருணங்கள் ..

உனக்காக  காத்திருந்த தருணங்களில்
தவம் புரியாமலே நானும் முனிவநானேன்
யுகங்கள் கடந்ததால்

தீப்பெட்டி இல்லை தீக்குச்சி  இல்லை
உரசிக் கொண்டன உன் உதடுகள்
தீ பிடித்தது என் இதயம் ...






Tuesday, May 8, 2012

இன்று  காலை  ஒரு அழகான  படலை  கேட்கும்  வாய்ப்பு  கிடைத்தது .

கேட்கும் போதும் வரிகளை படிக்கும் போதும் இதமாக  இருந்தது 

இதோ  அந்த வரிகள் ..


உன்னை சரணடைந்தேன் மன்னவா மன்னவா
இன்னும் ஒரு தேவை சொல்லவா சொல்லவா
இந்த அழகிய நிமிசம் இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிர நேரம் உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உனையே தொடர............வா

காற்று வெளி மின்மினியாய்
கண்கள் வளி நீ வந்தாய்
நானேழுதும் மேஜையிலே
எரியும் விளக்கய் ஒளிருகிராய்
எனது விரல் நீ பிடித்து
உயிரெழுத்தை எழுதுகிராய்
துணையெழுத்து நீயாக
உரவின் உலகை உயர்த்துகிராய்..
உன் வெள்ளை மனம் பொன் மஞ்ஜ்சள் நிறம்
நான் என்னை மறந்தேன்
நான் செய்த தவம் நீ
பெற்ற வரம் நான் உன்னை அடைந்தேன்
அந்த சங்கித சந்திப்பில் சந்தோச தித்திப்பில்
மழை துளியென மடியினில் விழுந்தேன்...
(உன்னை )

சேர்த்து வெளி வான்மதியாய்
நேற்று வரை வாழ்ந்திருந்தேன்
இன்று உந்தன் திருமதியாய்
உனது நினைவில் வளறுகிரேன் ..
பூவில் விழும் பனிதுளியாய்
மனதில் உன்னை நான் சுமந்தேன்
நீ கொடுத்த கனவுகளை
எனது விழியில் வாதுகிரேன்...
உன் பார்வைகளில் உன் ஸ்பரிசங்களில்
நான் என்னை அறிந்தேன்
உன் பூவித்ழில் உன் புன்னகையில்
நான் இடரிவிழுந்தேன்.....
இனி உன்வாசம் என்னேடு என்வாசம் உன்னோடு...
தொகுத்திட தொலைதிட வானத்தில் பறந்த்ந்தேன்..........

Sunday, October 23, 2011

என் கண்மணி

கண்மணி

நம் காதல் கல்லறையில் முடியலாம்
ஆனால் அதில் முளைக்கும்
ஒற்றை ரோஜா நம் காதலை
உலகுக்கு சொல்லும் ..

கண்மணி

என் கனவுகள் விற்பனைக்கு அல்ல
ஏனெனில் அதில் - உன்
நினைவுகளும் கலந்திருப்பதால் ..

கண்மணி
காதல் கருவை சுமந்து சுமந்து
நானும் தாய் அனேனடி..

விடிகாலை   பொழுதுகளிலும்
வெளிச்சமில்லா இரவுகளிலும்
உன் நினைவுகளால் சிரித்திருக்கிறேன்
அழுதிருக்கிறேன்.உறக்கம் வராமல் 
புரண்டு புரண்டு படுத்திருக்கிறேன் 
கண்மணி எனக்கும் கொஞ்சம் 
வைத்தியம் பாரடி ..


ஒவ்வொரு குளிர்கால இரவும் 
நாம் சேர்ந்திருந்த காலத்தை
நினைவு படுத்தி தேகம் தகிக்குதடி

ஒவ்வொரு வெயில் கால இரவும் 
நாம் பிரிந்திருந்த காலம் 
நினைவில் வந்து வேதனையை 
தூண்டுதடி .என்ன செய்வேன் நான் .

ஒவ்வொரு முறையும் உன்னை 
மறக்க நினைத்து நினைத்து 
முடியாமலே தவிக்கிறேனடி 

விளக்கென்று தெரியாமல் 
உன்னை சுற்றி சுற்றி வந்த 
விட்டில் பூச்சி ஆனேன் . 

முகம் பாராமலே உன் 
முகவரி கொடுத்தாய்
என் முகவரி நீயென்று ஆன போது
ஏனடி சொல்லாமல் ஓடி விட்டாய்

எத்தனையோ இரவுகள் உன்னை நினைத்து
என் இதயம்
அழுதிருக்கிறது -- கண்மணி
ஒரு பகலேனும் எனக்காக நீ
சிரித்திருந்தால் என்ன..

தினமும் என்னோடு உன் கனவுகளில்
குடும்பம் நடத்தினாயே
ஒரு முறையேனும் நிஜத்தை
சொல்லியிருந்தால் என்ன ?
என்றும் உன் நிழலாய்
இருந்திருப்பேனே ......




Monday, August 1, 2011

நட்பு

உயிர் என்பது மூன்றேழுத்து
உறவு என்பது மூன்றேழுத்து
நட்பு என்பதும் மூன்றேழுத்து -ஆம்
உயிரோடு கலந்த உறவே நட்பு----

உறவுகள் என்பது உடல் உள்ள வரை
காதல் என்பது காமம் உள்ள வரை
நட்பு மட்டுமே உயிரின்
கடைசி சொட்டு உள்ள வரை---

உறவுகள் என்பது உயிர்மெய் எழுத்து
நட்பு என்பது உயிரெழுத்து -அது
மெய்யோடு சேராவிடினும் எப்போதும்
மெய்க்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கும் ....

உறவுகள் சில நேரம்
உறங்கி எழுந்த உடன்
கலைந்து செல்லும் கனவுகள் போன்றது
நட்பு என்பது உறங்கி எழுந்த பின்னும்
நீண்டு இருக்கும் நினைவுகள் ....

நட்பு சில நேரங்களில்
உணர முடியாமல் இருக்கலாம்-ஆனால்
நமக்கு தெரியாமலே நமக்குள்
உயிர் காற்றாய் போய் கொண்டிருக்கும்...

உறவுகள் மறந்து போகலாம்
காதல்கள் கசந்து போகலாம்
நட்பு மட்டுமே கல்லறை வரை ...

எந்த உறவும் நட்பாகி விடாது
நட்பு மட்டுமே எல்லாமும் ஆகும்....

எல்லா உறவுகளும் காலத்திற்கு கட்டுப் பட்டது
நட்பு மட்டுமே காலத்தை கட்டு படுத்துவது..

எந்த உறவுக்கும் வயதாகிப் போகலாம்
நட்பு மட்டும் என்றும் இளமையாய்...