Saturday, October 4, 2008

இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?


இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன். "வரும் பொதுத் தேர்தலில், ஜெயிலில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் முதல் அனைத்துக் கைதிகளும் ஓட்டுப் போடுவார்கள். அதற்காக அவர்கள் கோர்ட்டில் மனு போடுவார்கள். கோர்ட்டும் அவர்களுக்கு அனுமதி கொடுக்கும்... பாருங்கள்!' என நண்பர் என்னிடம் கூறவும் அதிர்ந்து போன நான், "அப்படியெல்லாம் ஒன்றும் நடக்க சாத்தியமே இல்லைங்க!' என்று பதில் கூற, நண்பர் தொடர்ந்தார்."என்ன நண்பரே... உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான, பண்பாடுகளும் கலாசாரமும், இறையாண்மையும் நிறைந்த ஒரு இந்தியநாட்டின் அரசாங்கத்தைக் காப்பாற்ற படுபயங்கர கொலைகள் செய்து, அவை நிரூபிக்கப்பட்டு,நமது கோர்ட்டால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை, நம்பிக்கை ஓட்டுப் போடுவதற்கு மத்திய அரசே ஏற்பாடு செய்கிறது.சுப்ரீம் கோர்ட்டும் அவர்களை அனுமதிக்கிறபோது, வரும் தேர்தலில் ஓட்டுப் போட நாட்டிலுள்ள மற்ற கைதிகளையும் அனுமதிக்கலாம் அல்லவா?மேலும், பப்பு யாதவ் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஓட்டுப்போட அனுமதி கேட்ட போது, "இது தப்பு யாதவ்' என நமது சுப்ரீம் கோர்ட்டே சொல்லவில்லையே...!' என நண்பர் மனவேதனையுடன் கூறியபோது என்னால் பதில் கூற முடியவில்லை.ஒருபக்கம், ஆங்காங்கே குண்டுகளை வைத்து அப்பாவி மக்களின் உயிரைக் கொல்கின்றனர் பயங்கரவாதிகள்.இன்னொரு பக்கம் கொலைக் குற்றவாளிகள் ஓட்டுப்போட்டு, ஜெயித்துநாட்டை ஆள்பவர்களாகி, மக்களின் மனதைக் கொல்கின்றனர்.எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இந்தியாவில் பிறக்க வேண்டும், அதிலும் இந்தியனாய் வாழவேண்டும் என நமது தேசத்தின் மீது நேசம் கொண்ட ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். ஆனால்...நடப்பவற்றை நினைத்துப் பார்த்தால், நின்றுவிடவா? என இதயம் கேட்கிறது. கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது. எம் இதயம் நிறைந்த இந்தியா... இன்று எங்கே செல்கிறது?யார் இதற்கு பதில் சொல்வார்கள்? ஒன்றும் சொல்லத் தெரியவில்லை எமக்கு!

No comments: