Monday, August 1, 2011

நட்பு

உயிர் என்பது மூன்றேழுத்து
உறவு என்பது மூன்றேழுத்து
நட்பு என்பதும் மூன்றேழுத்து -ஆம்
உயிரோடு கலந்த உறவே நட்பு----

உறவுகள் என்பது உடல் உள்ள வரை
காதல் என்பது காமம் உள்ள வரை
நட்பு மட்டுமே உயிரின்
கடைசி சொட்டு உள்ள வரை---

உறவுகள் என்பது உயிர்மெய் எழுத்து
நட்பு என்பது உயிரெழுத்து -அது
மெய்யோடு சேராவிடினும் எப்போதும்
மெய்க்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கும் ....

உறவுகள் சில நேரம்
உறங்கி எழுந்த உடன்
கலைந்து செல்லும் கனவுகள் போன்றது
நட்பு என்பது உறங்கி எழுந்த பின்னும்
நீண்டு இருக்கும் நினைவுகள் ....

நட்பு சில நேரங்களில்
உணர முடியாமல் இருக்கலாம்-ஆனால்
நமக்கு தெரியாமலே நமக்குள்
உயிர் காற்றாய் போய் கொண்டிருக்கும்...

உறவுகள் மறந்து போகலாம்
காதல்கள் கசந்து போகலாம்
நட்பு மட்டுமே கல்லறை வரை ...

எந்த உறவும் நட்பாகி விடாது
நட்பு மட்டுமே எல்லாமும் ஆகும்....

எல்லா உறவுகளும் காலத்திற்கு கட்டுப் பட்டது
நட்பு மட்டுமே காலத்தை கட்டு படுத்துவது..

எந்த உறவுக்கும் வயதாகிப் போகலாம்
நட்பு மட்டும் என்றும் இளமையாய்...










Monday, February 28, 2011

வெட்கமில்லை

ஏனடி
உனக்குதான் வெட்கமில்லை என்று நினைத்திருந்தேன்
உன் கண்களுக்கு கூடவா
என்னை பார்த்த உடன்
இமை என்ற ஆடை திறந்து என்னை பார்கிறதே..


  


Saturday, March 20, 2010

இயற்க்கை

அதிகாலை குயிலின் பூபாளம் கேட்டு
விழித்தெழுந்தான் சூரியன் ..

காலச் செடியில் ஓர் புது மலர் விடியல் .
வெண்பட்டுப் போர்வையில் புற்களின் மேல்

ஓராயிரம் பனித்துளி பாயிரம் பாட
ஒவ்வொரு துளியிலும் ஒரு சூரியன் நாட்டியமாட.....

ஓயாது மலையை  குளிப்பாட்டும்   அருவி
பகலில் கதிரவனை காண
வெட்கப் பட்டு இரவில் மேகத்தில்
ஒளிந்து வரும் நிலவுக் காதலி ....

தூரங்கள் ஆயிரம் இருந்தாலும்
மழைத்துளி மூலம் பூமியை
நலம் விசாரிக்கும் வானம் ..

ஆயிரம் முறை தொட்டாலும்
மீண்டும் தொட தீராத காதலுடன்
அலைகடல்..

அந்தி மாலைப் பொழுதில்
தென்றல் புதியதொரு ராகம் பாட
தலையாட்டி ரசிக்கும் நெல் வயல்கள் ....

ஆற்று நீரில் ஆயிரம் சூரியன்
வெள்ளி மீன்கள் துள்ளி குதிக்க
திருவிழா கண்டது மனசு....

தொலைந்து போனது தெரியாமல்
தொலைந்த இடம் புரியாமல்
தொடர்ந்து முகவரி தேடி
காற்று வெளியில் அலையும் மேகங்கள் ....

ஒவ்வொரு மரமாய் நலம் விசாரிக்கும் காற்று
அசைந்தது மரமா இல்லை காற்றா?....

பூமிக்கு குடை பிடிக்கும் மரங்களுக்கு
மட்டும் குளிரே எடுப்பதில்லையோ...

ஆயிரம் ஆயிரம் பூக்கள்
ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு  வாசம்...

எத்தனை பூக்கள் மலர்ந்தாலும்
எந்தனை பூக்கள் மறைந்தாலும் ....

பூக்களின் வாசம் குறைய வில்லை
மனிதனின் நேசமும் மாறவில்லை
ஒற்றை காலில் தாமரையின் தவம்
யாருக்காக?.....

ஓயாது சூரிய காதலனை
நினைத்து கனவு காணும் அல்லி....

தான் உடுத்தியது பட்டென்று
தெரியாமல்
பறக்கும் வண்ணத்து பூச்சி....

ஆயிரம் காற்றாடி இருக்கலாம்
தொட்டு தழுவி மென்மையாய்
சுகம் தரும் தென்றல் போல் வருமா...

வெண் பட்டுப் பனித்துளி
பச்சை மரகத மரங்கள்
சிவப்பு செவ்விதழ் கோவை
அந்தி மஞ்சள் வானம்......

கருப்பு கூந்தல் மேகம்
கூந்தலில் ஆயிரம் விண்மீன்  மலர்கள்....

வாழ்கையை ரசிப்பவன் மனிதன்
இயற்கையை ரசிப்பவன் கவிஞன்..

Monday, October 26, 2009

வெட்கம்

பெண்ணே
எத்தனையோ பெண்களின் வெட்கத்தை
என் பேனா கவிதை ஆக்கியிருக்கிறது .
ஆனால் உனக்கு கவிதை எழுதும் போது மட்டும்
என் பேனவுக்கேவெட்கம் வந்தது .

Tuesday, May 26, 2009

தமிழன் என்று சொல்லடா

நாங்களும் இந்தியர்கள்தான் .....
நான் நன்றாக இருக்கிறேன்,
என்னகென்ன குறை ?!!!...
என் சகோதரர்கள் வெட்டப்படும்,
சகோதரிகள் கற்பழிக்கப்பட்டும்,
என் தமிழ்குழந்தைகள் தலையையும்
கைகளையும்கால்களையும் தொலைத்துவிட்டு
சிதறிகிடப்பதை கண்டும் கூட
செயலையோகுரலையோ உயர்த்தும்
என்உரிமைகள் பரிக்கப்படாலும் - நான்நன்றாகவே இருக்கிறேன்,
என்னகென்ன குறை ?
நரிகள் ஆண்டாலும், பாம்புகள் ஆண்டாலும்
நானும் என் பெற்றோரும்
இங்குபாதுகாப்பாகவே இருக்கிறோம்
பின்னே !!என் பாதுகாபிற்காக என்னை
இன்றுவரைசந்தித்திராத, என்னோடு பிறக்காத
என்சகோதரர்கள்தானே தன்னை
பலியிட்டுஎன்னை காத்து வருகிறார்கள் !!
வேறு எந்த நாடும் இலங்கையில் கால் வைக்ககூடாது
என்பதற்காக "சின்ன வீடு" இலங்கையை,
என் தேசம் வெட்கத்தை விட்டு
எப்போதும் "தாஜா"செய்யட்டும் - அதற்கு என் தமிழ் ரத்தம்தான் தரையெல்லாம்பாய வேண்டுமா ??...
நாம் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ...
தினமும் 1 மணிநேரம் கடற்கரையில் ஓடினால்100 வயது வரை வாழலாமாம் !!!...அவர்கள் ஒரு நாள்,
ஒரே ஒருநாள்சுதந்திரமாக வாழ்ந்துவிட வேண்டும் என்றுகழுத்தில் விஷத்தோடு கல்லிலும் முள்ளிலும்ஓடுகிறார்களே அதைபோல !!!!...
யார் சொன்னது என் கடமைகள்
எனக்கு தெரியாது என்று ??"தமிழே, தாயகமே" என்று யார் முழங்கினாலும் கொடிபிடிக்கிறேனேஅது என் ஜனநாயக கடமை இல்லையா ?
இரவு எத்தனை மணி ஆனாலும் IPL ஆட்டத்தை பார்த்துவிட்டுதான்மறுவேலை
இது என் தேசிய உணர்வு இல்லையா ??
திரையில் தோன்றும் கூத்தாடிகளுக்குமாலை மரியதையோடு பாலாபிஷேகம்செய்வோம் அது எங்கள்
பக்தி பரவச உணர்வு இல்லையா ??
அரைகுறை ஆடை 'நிர்வாண கூத்தாடிகளான'நடிகைகளுக்கு
நாங்கள் கட்டாத கோவில்களா ??
இதைவிட வேறு என்ன பொறுப்புகளை நாங்கள் செய்யவேண்டும்என்று நினைகிறீர்கள் ??
இதுகளும் இதுகளின் மன்றங்களும் என்தமிழனுக்கு செய்யாத தொண்டா ??? !!!
என்னிடம் 'டிக்கெட்' பிட்சைஎடுக்கும்
நடிகனையும்ஓட்டு பிட்சைஎடுக்கும்
தலைவரையும் நான்உயிரினும் மேலாக கருதுகிறேன்...
பின்னே !!என் இனம் தினம் தினம் சிதறி அழிவது கண்டுதாளமுடியாமல், உறங்கமுடியாமல் பலமாதங்களாக உயிர் வாழ்கிறார்கள் !!
உலகிலேயே கேட்பாரற்று மிக மிக மலிவாககிடைப்பது தமிழனின் உயிர்தான் ... !!!"முன் தோன்றிய மூத்தகுடிமகன்" என்று சொல்லிகொண்டாலும்நடத்தப்படுவது என்னவோ "மூத்தகுடி-மகன்" போலதான் ....
தமிழ் தூண்களின் திறமையும் திட்டமிடலும்
'மானாட மயிலாடவில்' தெரிகிறது ..
' ஸ்பெக்ட்ரத்தில்' கலர் கலராய் தெரிகிறதுதமிழனை காப்பாற்ற நாற்பதும் பேரும்என்னமாய் உழைக்கிறார்கள் !!...
முதலில் எல்லோருக்கும் டிவி தருவதுதான் நல்லது !!
அப்போதுதான் என் இனம், என் குழந்தைகள்
தினமும்ரத்தம் தெறித்து சாவதை பார்த்து ரசிக்கலாம் ...பங்குசந்தையையும்,அமெரிக்க பொருளாதாரத்தையும்,மென்பொருள் ஏற்ற இரக்கத்தையும்,IPL ஆட்டத்தையும்,அற்புத நடிகர்களையும்,
அரைநிர்வாண நடிகைகளையும் உற்று கவணிக்கலாம்
ஒரு காலத்தில் இவை மட்டும்தான் நம்மோடுஇருக்கும் - நம் இனம் இருக்காது ...
கொஞ்சமும் உணர்வில்லாமல் பதற்றப்படாமல்
எப்படி இதை நம்மால் பார்க்க முடிகிறது ...?
என் ஜனநாயக நாட்டில் இதற்காக
பேசத்தான் முடியாது,கோபப்படதான் கையாலாகாது.
வருத்தபடவோ அழவோ கூட இயலாதா ??
இயலாது இயலாது ..... மறத்தமிழன்...
வீரத்தை வெள்ளையனுக்கும் கற்றுதந்த தமிழன் எப்படி அழுவான் ??..
நம் தந்தையின் நெஞ்சில் குண்டுகள் பாயும்போதும் ,
தாயின் உடலில் தீ பரவும்போதும்,சகோதரனின் உறுப்புக்கள் வெட்டப்படும்போதும்,
தங்கைகள் கற்பழிக்கப்படும்போதும்,
குழந்தைகளை திசைக்கு ஒன்றாக
பிய்த்து எறியும்போதும்,
கொதிக்கும் 'தார்'ல் எறியும்போதும்
இப்படிதான் பார்த்துக்கொண்டு இருப்போமா ??
என்னையே நான் கேட்டுகொள்கிறேன்
"மானத்தமிழனே.. மானத்தமிழனே...
நீ இப்போது ஈனத்தமிழனே" என்று...
இலங்கை ராணுவத்தை நியாயப்படுத்தும்,
கணவான்களே,புத்தர்களே....
இந்திய தலைவர்களின் உயிர்தான் உயிர்
மற்றவன் உயிர் எல்லாம் மயிர்
என்று சொல்லும் மகாத்மாக்களே ..."தமிழன்" என்பதை மறந்துவிட்டு "மனிதன்" என்றகுறைந்தபட்ச தகுதியையாவது
தந்துநெஞ்சில் "கை" வைத்து
சொல்லுங்கள்அங்கே நடப்பதெல்லாம் சரிதானா ???"சரி" என்று நீங்கள் சொன்னால் உங்கள்
ரத்தத்தை பரிசோதித்து கொள்ளுங்கள்
அது ரத்தமாக இல்லாமல் இருக்ககூடும் !!!
"என்னை கடலிலே தூக்கி போட்டாலும்
கட்டுமரமாக தமிழர்களை காப்பேன் "ஆகா!!
என்ன அற்புதம் !!மீன் பிடிக்கசென்று குண்டடிபட்டு கடல்நீரில் துடிதுடித்து இறந்து 'கட்டைமரமாய்'தினம் தினம் மிதக்கும் தமிழர்களில் இந்த'கட்டுமரம்' எத்தனைபேரை காப்பாற்றிஇருக்கிறது தெரியுமா ??
"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா" என்பது
எனக்கு மட்டும்தானா ??
அவர்கள் பேசுவது தமிழ் என்றால்
அவர்களும் தமிழர்கள்தானே ??அவர்கள் மட்டும்"
தமிழன் என்று சொல்லடா
தன்மானம் இழந்து சாவடா"
என்று சொல்லி பரதேசியாய்........

Monday, May 18, 2009

வாழ்க தமிழினம்

இதை எழுதும் போது மிகுந்த மன வேதனையோடு கண்ணில் கண்ணீருடன் .இன்று சிங்கள தேசம் கொண்டாடுகிறது .சில தமிழ் பத்திரிக்கைகள் கொண்டாடுகிறது .சில தமிழ் தலைவர்களுக்கு கொண்டாட்டம்.சிலருக்கு திண்டாட்டம் .இனி yethai வைத்து அரசியல் நடத்துவது என்று.இருபத்துஐந்து வருட போராட்டம் இரண்டு லட்சம் தமிழ் மக்களின் தியாகம் எல்லாம் முடிந்தது . தமிழன் என்ற இனம் உலகத்தில் உண்டு என்று உலகுக்கு சொன்னவர்கள் .எத்தனை தடை இருந்த போதிலும் வான் படை கண்ட உன்னத தமிழர்கள் . அகதிகளாய்சென்றாலும் சென்ற இடங்களில் எல்லாம் செல்வம் சேர்த்தவர்கள் (தமிழ் நாட்டுக்கு வந்தவர்களை தவிர ).உலகம் தமிழ் அகதிகளாய் தன்னோடு அரவணைத்து கொண்டது .தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் மட்டும் mukaamkali அடைதது வைத்தனர் . இதில் சிங்களவனுக்கு தமிழன் வழிகாட்டி .இந்த நிலைமைக்கு யார் காரணம் .நிச்சயம் சிங்களவனோ இல்லை சோனியா காந்தியோ இல்லை.நாம் தான் .உலகத்தில் தன் இனம் அழிக்கப் படும் போது வேடிக்கை பார்த்த இனம் தமிழ் இனம் மட்டும் தான்.ரோம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் . அவனுக்கு அடுத்து நமது தமிழர் தலைவர் கருனநிதி . அப்புறம் நாம் தமிழர்கள் .ஒருநாள் நமது வரும்கால சந்ததியினர் கதை சொல்வார்கள் ." முன்னொரு காலத்தில் தமிழினம் என்று தமிழ்நாட்டில் இருந்தது .சிறிலங்காவிலும் இருந்தது .அப்புறம் அவர்களே சண்டை போட்டு தங்களை தாங்களே கொன்று கொண்டார்கள் ."இதையும் வேறு எதாவது மொழியில் தாஅன் சொல்வார்கள் .எனென்றால் அப்போது தமிழ் இருக்காது .தமிழ் இனம் இருக்காது.நாம் எல்லோரும் ஆங்கிலம் படித்து ஆங்கிலேயர் ஆகி விடுவோம். இந்தி படித்து இந்தியன் ஆகியிருப்போம் .ஈழத்தில் தமிழினம் அழிந்து poi இருக்கும்.என்ன செய்வது .நாம் ஜன நாயக நாட்டில் வாழ்கிறோம் .மக்கள் யாரும் ஒட்டு போடமலேயே அதிகமான வோட்டு வித்யாசத்தில் செயிக்கலாம் .இந்த நாட்டில் பிறந்ததிர்காகவும் தமிழனாய் இருப்பதர்ககாவும் வெட்கப் படுவோதொடு வேதனை படுவதோடு நாம் என்ன செய்ய முடியும் .வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கப் வாங்குமா என்று பார்க்க வேண்டியதுதான் .ஈமெயில் chattil கடலை போட போட வேண்டியதுதான் .அப்புறம் நான் இந்து ,நீ கிறிஸ்ட் என்று சண்டை போட வேண்டியது தான் .இதை நான் சொல்வதார்காக யாரும் இந்த குரூப் விட்டு பொய் விடுவேன் என்று மிரட்டலாம .அட போங்கப்பா . மனசு ரொம்ப வலிக்குது .எனேன்றல் மனிதர்களை விட நமக்கு மதம்தான் முக்கியம் என்னையும் சேர்த்துதான் .வாழ்க தமிழனம் வாழ்க அவர்களது சுயநலமும் துரோகமும் .விஜயசங்கர்

Friday, February 20, 2009

துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்

ஆந்திராவில் தனித் தெலுங்கானா மாநிலத்தை ஆதரிப்பதாக அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாததால் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி M.L.A க்கள், M.Pக்கள் அனைவரும் பதவியை துறந்தனர். இத்தனைக்கும் அங்கு உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை. கொள்கைக்காகவே அவர்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.ஆனால் தமிழகத்தில் இத்தனை பேர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தும் பதவியை துறக்க ஒருவரும் முன் வரவில்லை.
இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் கூட பதவி சுகத்தை விட மனது வரவில்லை. பதவியை இழந்தால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்று வியாக்கியானம் பேசுகிறார்கள். மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை அரசுக்கு செல்லும் உதவி தடைபட்டிருக்கும். தேர்தல் முன் கூட்டியே வந்திருக்கும். அடுத்து வரும் ஆட்சியாளர்களின் பார்வை வேறுவிதமாக இருந்திருக்கும். போரில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கும்.
இந்த ஓட்டு பொறுக்கிகள்தான் எதுவும் செய்யவில்லை. போராடும் மற்றவர்களையாவது விட்டார்களா என்றால் அதுவும் இல்லை. போட்டி பேரணி, போட்டி உண்ணாவிரதம், போட்டி மனிதச் சங்கிலி என்று உண்மையான போராட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்வது, ஊடகங்களை மிரட்டி உண்மைச்செய்திகளை வெளியிடாமல் தடுப்பது என்று எத்தனை நாடகங்கள் நடத்தினார்கள்.
மாணவர் போரட்டத்தை ஒடுக்க காலவரையற்ற விடுமுறை அளித்திருக்கிறார்கள். அப்படியானால் இன்னும் ஒரு சில நாட்களில் புலிகளை ஒழித்துக்கட்டி விடுவார்கள். நாம் கல்லூரிகளை திறந்து விடலாம் என்றுதானே திட்டம் போட்டிருக்கிறார்கள். புலிகள் எப்போது அழிவார்கள் என்று இலவு காத்த கிளி போல மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழினமே நெருக்கடியில் உள்ள போது,அன்பழகன் அறிக்கை வெளியிடுகிறார். முதல்வர் மருத்துவமனையில் உள்ளார் அவருக்கு சிறு நெருக்கடி கூட தரக்கூடாது என்று.
கால சக்கரம் ஓடிக் கொண்டே இருக்கிறது. கடந்த 36 வருடங்களில் உலகில் எத்தனையோ மாற்றங்கள் நடந்து விட்டன. மாற்றம் என்ற சொல் கூட மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல்வாதிகள் நிமிடத்திற்கு ஒரு முறை மாறி மாறி பேசுகிறார்கள். ஆனால் கொண்ட கொள்கையிலும் போராட்டத்திலும் இன்று வரை பிறழாமல் மன உறுதிமிக்க ஒரே தலைவன் பிரபாகரன் தான்.
துரோகிகள்தான் எத்தனை..அதில் எத்தனை விதங்கள்..எத்தனை முகங்கள்..
இந்திய கருணா
இந்தியாவின் நீரோ மன்னன். துரோகத்தின் மொத்த உருவம். உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருந்திருக்கலாம். மனித சங்கிலி, போட்டி குழு, போராட்டம், 'அய்யகோ' தீர்மானம், உயிரை தருவேன், ஆட்சியை இழக்க தயார் என்றெல்லாம் சொல்லி எவ்வளவு நாள் இழுக்க முடியுமோ இழுத்தார். கடைசியில் காங்கிரசையும் தி.மு.க வையும் பிரிக்க சூழ்ச்சி என்றார். ஒற்றுமையாகஇருப்போம் என்று சொல்லியே ஒற்றுமைக்கு வேட்டு வைத்தவர். தீக்குளிப்பை அரசியல் செய்யாதீர் என்று சொல்லி சொல்லியே தீக்குளித்தவர்கள் பொண்டாட்டியுடன் சண்டை போட்டுத்தான் செத்தார்கள் என்று தியாகத்தை கொச்சைப்படுத்தியவர். இலங்கை தமிழர் சாவதில் கூட அரசியல் செய்த உலக தமிழின தலைவர் இந்திய 'கருணா' இவர்தான்.
இலங்கை கருணா
துரோகிகளின் வரிசையில் முதல் இடத்தை பிடித்தவர். துரோகம் என்ற‌ வார்த்தையின் முழு அர்த்தம். கோடி எட்டப்பன்களுக்கு சமம். மஹிந்தவின் காசுக்காக‌ இனத்தையே காட்டி கொடுத்தான்.
விஜயமில்லா காங்கிரஸ்காந்த்
எதிர்கால கருணாநிதி. தமிழினத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் போது வரப் போகும் காங்கிரஸ் கூட்டணிக்காக மவுனியாக இருந்தார். சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்யும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் ஐ.நா சபையை அணுக வேண்டும் என்றார். ஐ.நா சபையை யார் கேட்பது? மத்திய அரசில் உள்ள சோனியாதான் கேட்க வேண்டும்?ஆட்சிக்கு வராத பொழுதே இவ்வளவு நாடகம் என்றால் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? மக்கள் இவரை பெரிதும் நம்பி ஏமாந்தார்கள்.
ஜால்ரா லலிதா
இராஜபக்சேவின் ஜால்ரா தங்கை. தன்னுடைய பாதுகாப்புக்காக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் பல முறை ஏறிய இந்த‌ லலிதாமணி, போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று தத்துவ முத்துக்களை உதிர்த்தார். குழந்தைச் செல்வங்களை பெற்றிருந்தால் அதன் அருமை தெரிந்திருக்கும்.
காங்கிரஸ்காரர்கள்
இராஜிவ் காந்தியுடன் பூந்தமல்லிவரை வந்து விட்டு பெரும்புதூரில் சிறுநீர் வருகிறது, கழிவறைக்கு செல்கிறேன் என்று சாக்குப் போக்கு சொல்லி விட்டு ஓடியவர்கள்.
தினமலர்
டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற துரோகிகளின் பேட்டியை மூன்று பக்கத்திற்கும், புலிகளின் அழிவுச் செய்தியை மட்டும் முதல் பக்கத்தில் வெளியிடுவார்கள். நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்படுவதை ஒரு நாளும் வெளியிடமாட்டார்கள். பார்ப்பன வெறி பிடித்த தமிழின விரோத பத்திரிக்கை.
மருத்துவர் ஐயா
பிள்ளையையும் கிள்ளுவார், தொட்டிலையும் ஆட்டுவார். பிரணாப்புடன் சந்திப்பு திருப்தி அளிக்கவில்லை என்பார் மறு நிமிடம் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில்தான் நீடிக்கிறோம் என்பார். ஒரு பக்கம் மக்கள் தொலைக்காட்சியில் ஈழ புராணம் மறு புறம் மத்திய அரசில் பதவி.
புரட்சிப் புயல்
தப்பான இடத்தில் சரியான டைமில் இருப்பார். புலிகளின் குரல் என்று சொன்னார்கள். ஆனால் போயஸ் கார்டன் முந்தானையிலிருந்தல்லவா குரல் ஒலிக்கிறது.
ஈழ மக்களை கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தமிழக மக்களை இந்த துரோகிகளிடமிருந்து அந்த கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.
எதிர்வரும் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்று நினைத்தால் அது பெரிய முட்டாள்தனம். ஏனென்றால் நமது மக்கள்தான் இந்து ஜாதி, இனம், கட்சி, தலைவன், தொண்டன் என்று பிரிந்து கிடக்கிறார்களே... 'டெத் ஸ்கோர்' உயர்ந்து கொண்டிருக்கும் போது 'கிரிக்கெட் ஸ்கோர்' கேட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவர்கள் எங்கே தண்டனை வழங்கப் போகிறார்கள்.