Tuesday, September 23, 2014

எனது அன்பு மனைவியே

எனது அன்பு மனைவியே ,

எனது வாழ்க்கை பயணத்தின்
வழித்துணையாய்  வந்தவளே

என் கனவு தேசத்தின் காதல் ராணியே

ஆடி மாத காவிரியில் வரும்
புது வெள்ளம்  போல வந்தவளே

 எனது  இரவும் பகலும் நீதானே எனக்கு
எனது இடியும் மின்னலும் நீதானே
எனது புயலும் மழையும் நீதானே

சில நேரங்களில் சூரியனை போல் சுட்டெரிக்கிறாய்
ஆனாலும் சூரியன் இல்லாமல் இரவேது பகலேது
எனது வாழ்கை தான் ஏது

நமது தருணங்கள்  சில நேரங்களில்
அமைதியானது
சில நேரங்களில் ஆரவாரமானது
ஆனா போதிலும் அது உயிர்ப்புள்ளது

உன்னுடைய காதல் முரட்டு தனமானது
ஆனாலும் முடிவற்றது

ஒவ்வொரு முறையும் கரைக்கு
வந்து கவிதை  எழுதும் கடல் அலை போல
நம்முடைய ஒவ்வொரு தருணங்களும்
காலம் எழுதும் கவிதைகளே

எனக்கு இமயம் வெல்லும் ஆசை இல்லை
உன் இதயம் வெல்லவே ஆசை

கவிதை எழுதி கொண்டிருந்தேன்
உன் அன்பு எனும் மை கொண்டு
காவியங்களை எழுதுவேன்