Sunday, October 23, 2011

என் கண்மணி

கண்மணி

நம் காதல் கல்லறையில் முடியலாம்
ஆனால் அதில் முளைக்கும்
ஒற்றை ரோஜா நம் காதலை
உலகுக்கு சொல்லும் ..

கண்மணி

என் கனவுகள் விற்பனைக்கு அல்ல
ஏனெனில் அதில் - உன்
நினைவுகளும் கலந்திருப்பதால் ..

கண்மணி
காதல் கருவை சுமந்து சுமந்து
நானும் தாய் அனேனடி..

விடிகாலை   பொழுதுகளிலும்
வெளிச்சமில்லா இரவுகளிலும்
உன் நினைவுகளால் சிரித்திருக்கிறேன்
அழுதிருக்கிறேன்.உறக்கம் வராமல் 
புரண்டு புரண்டு படுத்திருக்கிறேன் 
கண்மணி எனக்கும் கொஞ்சம் 
வைத்தியம் பாரடி ..


ஒவ்வொரு குளிர்கால இரவும் 
நாம் சேர்ந்திருந்த காலத்தை
நினைவு படுத்தி தேகம் தகிக்குதடி

ஒவ்வொரு வெயில் கால இரவும் 
நாம் பிரிந்திருந்த காலம் 
நினைவில் வந்து வேதனையை 
தூண்டுதடி .என்ன செய்வேன் நான் .

ஒவ்வொரு முறையும் உன்னை 
மறக்க நினைத்து நினைத்து 
முடியாமலே தவிக்கிறேனடி 

விளக்கென்று தெரியாமல் 
உன்னை சுற்றி சுற்றி வந்த 
விட்டில் பூச்சி ஆனேன் . 

முகம் பாராமலே உன் 
முகவரி கொடுத்தாய்
என் முகவரி நீயென்று ஆன போது
ஏனடி சொல்லாமல் ஓடி விட்டாய்

எத்தனையோ இரவுகள் உன்னை நினைத்து
என் இதயம்
அழுதிருக்கிறது -- கண்மணி
ஒரு பகலேனும் எனக்காக நீ
சிரித்திருந்தால் என்ன..

தினமும் என்னோடு உன் கனவுகளில்
குடும்பம் நடத்தினாயே
ஒரு முறையேனும் நிஜத்தை
சொல்லியிருந்தால் என்ன ?
என்றும் உன் நிழலாய்
இருந்திருப்பேனே ......




Monday, August 1, 2011

நட்பு

உயிர் என்பது மூன்றேழுத்து
உறவு என்பது மூன்றேழுத்து
நட்பு என்பதும் மூன்றேழுத்து -ஆம்
உயிரோடு கலந்த உறவே நட்பு----

உறவுகள் என்பது உடல் உள்ள வரை
காதல் என்பது காமம் உள்ள வரை
நட்பு மட்டுமே உயிரின்
கடைசி சொட்டு உள்ள வரை---

உறவுகள் என்பது உயிர்மெய் எழுத்து
நட்பு என்பது உயிரெழுத்து -அது
மெய்யோடு சேராவிடினும் எப்போதும்
மெய்க்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கும் ....

உறவுகள் சில நேரம்
உறங்கி எழுந்த உடன்
கலைந்து செல்லும் கனவுகள் போன்றது
நட்பு என்பது உறங்கி எழுந்த பின்னும்
நீண்டு இருக்கும் நினைவுகள் ....

நட்பு சில நேரங்களில்
உணர முடியாமல் இருக்கலாம்-ஆனால்
நமக்கு தெரியாமலே நமக்குள்
உயிர் காற்றாய் போய் கொண்டிருக்கும்...

உறவுகள் மறந்து போகலாம்
காதல்கள் கசந்து போகலாம்
நட்பு மட்டுமே கல்லறை வரை ...

எந்த உறவும் நட்பாகி விடாது
நட்பு மட்டுமே எல்லாமும் ஆகும்....

எல்லா உறவுகளும் காலத்திற்கு கட்டுப் பட்டது
நட்பு மட்டுமே காலத்தை கட்டு படுத்துவது..

எந்த உறவுக்கும் வயதாகிப் போகலாம்
நட்பு மட்டும் என்றும் இளமையாய்...










Monday, February 28, 2011

வெட்கமில்லை

ஏனடி
உனக்குதான் வெட்கமில்லை என்று நினைத்திருந்தேன்
உன் கண்களுக்கு கூடவா
என்னை பார்த்த உடன்
இமை என்ற ஆடை திறந்து என்னை பார்கிறதே..